ஈரோட்டில், கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 13 பேருக்கு பாதிப்பு


ஈரோட்டில், கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 13 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2020 12:00 PM IST (Updated: 4 Aug 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார். மேலும் புதிதாக 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட தொப்பூர் வீதியில் 36 வயது பெண், 12 வயது சிறுமி, கே.ஏ.எஸ். நகரில் 3 வயது பெண் குழந்தை, ராதாகிருஷ்ணன் வீதியில் 65 வயது முதியவர், கருங்கல்பாளையம் கொங்கு நகரில் 85 வயது மூதாட்டி, கொங்கலம்மன் கோவில் வீதியில் 52 வயது ஆண், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் வீதியில் 41 வயது ஆண், சூரம்பட்டி பாரதிபுரம் வீதியில் 90 வயது முதியவர், சம்பத்நகரில் 70 வயது முதியவர் ஆகியோருக்கும், நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் புதுப்பாளையத்தை சேர்ந்த 23 வயது பெண், கவுந்தப்பாடி கணபதிநகரில் 50 வயது பெண், அம்மாபேட்டை அருகே மூணாம்சாவடி பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், 33 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 597 பேர் குணமடைந்து உள்ளனர். 160 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோட்டில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த மாதம் 28-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் நேற்று முன்தினம் காலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே 10 பேர் இறந்தநிலையில், தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு நேதாஜிரோடு பகுதியை சேர்ந்த 55 வயது ஆண் இறந்த விவரம், மாநில கொரோனா பாதிப்பு பட்டியலில் இதுவரை சேர்க்கப்படவில்லை.

Next Story