சிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாணவி முதலிடம்


சிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாணவி முதலிடம்
x
தினத்தந்தி 4 Aug 2020 8:21 PM GMT (Updated: 4 Aug 2020 8:21 PM GMT)

சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36-வது இடத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும் காரைக்கால் மாணவி சரண்யா பெற்று சாதனை படைத்துள்ளார்.

காரைக்கால்,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட 26 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி முடிவு வெளியிடப்படும்.

அதன்படி 2019-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காரைக்கால் பாரதிதாசன் நகரை சேர்ந்த கப்பல் என்ஜினீயர் ராமச்சந்திரன் என்பவரின் மகள் சரண்யா அகில இந்திய அளவில் 36-வது இடத்தையும், புதுச்சேரி மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3-வது முறையாக...

சரண்யா புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 3-வது முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதிய அவர் தற்போது வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் முதலிடம் பிடித்த அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Next Story