காட்பாடி பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி


காட்பாடி பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி
x
தினத்தந்தி 5 Aug 2020 7:50 AM IST (Updated: 5 Aug 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வழங்கினார்.

காட்பாடி,

காட்பாடி பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 200 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி காந்திநகரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.சுபாஷ், பெல்.ஆர்.தமிழரசன், சின்னதுரை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரவி பாபு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பி.நாராயணன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரராஜி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.ராகேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.சரவணன், சர்க்கரை ஆலை தலைவர் எம். ஆனந்தன், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் என்.ஜி.பாபு, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story