ஈரோடு மாவட்டத்தில், ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 789 ஆக உயர்வு


ஈரோடு மாவட்டத்தில், ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 789 ஆக உயர்வு
x
தினத்தந்தி 5 Aug 2020 5:45 AM GMT (Updated: 2020-08-05T11:10:26+05:30)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 789 ஆக உயர்ந்தது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 767 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும், 2 பேர் வேறு மாவட்ட பட்டியலில் இருந்து ஈரோடு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 769 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 789 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரில் 49 வயது ஆண், 40 வயது பெண் ஆகியோரும், என்.ஜி.ஜி.ஓ. காலனியில் 80 வயது மூதாட்டி, 56 வயது ஆண், 80 வயது முதியவர் ஆகியோரும், வீரப்பன்சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்த 48 வயது ஆணும், வண்டிபாளையம் லட்சுமிநகரில் 32 வயது ஆணும், கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு 2-வது வீதியை சேர்ந்த 51 வயது பெண்ணும், வில்லரசம்பட்டியில் 51 வயது ஆணும், கள்ளுக்கடைமேடு பகுதியில் 63 வயது ஆணும், வீரப்பன்சத்திரத்தில் 50 வயது ஆணும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.

பவானியில் 18 வயது சிறுமி, 36 வயது ஆண், 69 வயது முதியவர் ஆகியோர், பவானி போலீஸ் குடியிருப்பில் 49 வயது ஆண், பவானி பழனிபுரம் முதல் வீதியில் 40 வயது ஆண், பெருந்துறை கோவை ரோட்டை சேர்ந்த 61 வயது மூதாட்டி, சத்தியமங்கலத்தில் 75 வயது முதியவர், சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி வடக்கு வீதியில் 43 வயது பெண், கோபி புதுப்பாளையத்தில் 35 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது வரை 607 பேர் குணமடைந்து உள்ளனர். 172 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் ஏற்கனவே 11 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பவானியில் நேற்று 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

Next Story