மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: மும்பையில் புதிதாக 1,125 பேருக்கு கொரோனா


மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: மும்பையில் புதிதாக 1,125 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Aug 2020 12:27 AM IST (Updated: 6 Aug 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புதிதாக 1,125 பேருக்கும், தாராவியில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. நேற்று புதிதாக 10 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் நோய்க்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 334 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி 6 ஆயிரத்து 165 பேர் வீடு திரும்பினர். இதன் காரணமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடத்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 5 ஆயிரத்து 521 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1 லட்சத்து 45 ஆயிரத்து 961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில்...

மும்பையை பொருத்தவரை நேற்று புதிதாக 1,125 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று 42 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்ந்து மும்பையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 588 ஆக உயர்ந்தது.

மேலும் நேற்று 711 பேர் குணமாகி வீடு திரும்பினர். தற்போது 20 ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகர்கள் அதிகம் வசிக்கும் தாராவி குடிசை பகுதியில் நேற்று புதிதாக ஒருவருக்கும் மட்டும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 589 ஆகி உள்ளது.

Next Story