மாவட்ட செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார் + "||" + Abuse in toilet construction in the Clean India project; Complain to the Collector

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்
தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியை சேர்ந்த 14 பேர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-


நாங்கள் நெடுங்குன்றம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு எங்களது பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தனிநபர் கழிவறை திட்டத்தில் உள்ள பயனாளிகள் பட்டியலை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் எங்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது நாள் வரையிலும் தனிநபர் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நெடுங்குன்றம் ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுங்குன்றம் ஊராட்சியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு அதிகாரிகள் மீது குவியும் புகார்: காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு முகாம்
அரசு அதிகாரிகள் மீது லஞ்சம் தொடர்பாக அதிகளவில் புகார்கள் வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் காரைக்காலில் சிறப்பு முகாம நடைபெற்றது.
2. நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
3. குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
4. உத்தர பிரதேசத்தில் எம்.எல்.ஏ. மற்றும் மகன் உள்பட 3 பேர் மீது பாடகி பாலியல் பலாத்கார புகார்
நிஷாத் கட்சி எம்.எல்.ஏ. விஜய் மிஷ்ரா, அவரது மகன் உள்பட 3 பேர் மீது பாடகி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.