குடும்பத்தினர் 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா
குடும்பத்தினர் 10 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணா எம்.பி.க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் தற்போது மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ. ஆவார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நவ்னீத் ராணாவின் மகன், மகள், சகோதரி, மாமியார் உள்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் நவ்னீத் ராணாவுக்கு தொற்று கண்டறியப்படவில்லை.
தொற்று உறுதியானது
இந்தநிலையில் மீண்டும் நடந்த பரிசோதனையில் நவ்னீர் ராணாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே முகநூலில் தெரிவித்து உள்ளார்.
மராட்டியத்தில் ஏற்கனவே மந்திரிகள் அசோக் சவான், ஜித்தேந்திர அவாத், தனஞ்செய் முண்டே, அஸ்லாம் சேக் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story