மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியை விடுவிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பீகார் அரசு சொல்கிறது
மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியை விடுவிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மும்பை,
34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, சினிமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இந்தநிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தியே காரணம் என பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஒரு வாரத்திற்கு முன் பாட்னா போலீசார் ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரின் குடும்பத்தினர் உள்பட மேலும் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக பாட்னா தனிப்படை போலீசார் 4 பேர் விசாரணைக்காக மும்பை வந்தனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி
மும்பையில் உள்ள ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றபோது அவர் அங்கு இல்லை. அவர்கள் சுஷாந்த் சிங்கின் சகோதரி, அவரது முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே, இயக்குனர் ரூமி ஜாப்ரி, சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த நண்பர் சித்தார்த் பிதானி உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
ஆனால் விசாரணைக்கு மராட்டிய அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் மாநில அரசு குற்றம்சாட்டியது. மேலும் தங்களது மாநில போலீசார் மும்பையில் நடத்தி வரும் விசாரணையை மேற்பார்வையிட பாட்னா நகரத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி கடந்த 2-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டார். அன்று இரவு மும்பை விமான நிலையம் வந்து இறங்கிய ஐ.பி.எஸ். அதிகாரியின் கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான முத்திரை குத்தப்பட்டு அவர் கிர்காவில் உள்ள ஆயுதப்படை விடுதியில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
தனிப்படை திரும்பி சென்றது
இதற்கிடையே நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மராட்டியத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் பீகார் அரசு கோரிக்கை விடுத்தது. அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து மும்பையில் விசாரணை நடத்திய பீகார் தனிப்படை போலீசார் 4 பேர் நேற்று மும்பையில் இருந்து அந்த மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
எச்சரிக்கை
இதற்கு பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி. குப்தேஸ்வர் பாண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “விசாரணைக்கு சென்ற எங்களது ஐ.பி.எஸ். அதிகாரியை தனிமைப்படுத்தியதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே மராட்டிய மாநில டி.ஜி.பி.யை கேட்டுக்கொண்டேன். ஆனால் இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பதை விட சிறைவைக்கப்பட்டு உள்ளார் என்றே சொல்ல வேண்டும். இன்று (நேற்று) வரை காத்திருப்போம். அதற்குள் அவர் தனது பணியை தொடர மும்பையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம். கோர்ட்டை நாடுவோம். மராட்டிய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டுகூட அதிருப்தி தெரிவித்து உள்ளது” என்றார்.

Related Tags :
Next Story