இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கர்நாடகத்தில் ஒரே நாளில் 6,805 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6,805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 93 பேர் பலியாகியுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6,805 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தினமும் 100-ஐ நெருங்கி பதிவாகி வருகிறது.
கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 6,805 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,897 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு நகரில் 2,544 பேர்
புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 2,544 பேர், பல்லாரியில் 431 பேர், மைசூருவில் 361 பேர், சிவமொக்காவில் 292 பேர், பெலகாவியில் 229 பேர், உடுப்பியில் 217 பேர், தார்வாரில் 212 பேர், தாவணகெரேயில் 197 பேர், கலபுரகியில் 196 பேர், ராய்ச்சூரில் 181 பேர், தட்சிண கன்னடாவில் 173 பேர், பாகல்கோட்டையில் 168 பேர், துமகூருவில் 160 பேர், ஹாசனில் 158 பேர், மண்டியாவில் 134 பேர், கொப்பலில் 132 பேர், கதக்கில் 124 பேர், சிக்பள்ளாப்பூரில் 117 பேர், கோலாரில் 107 பேர், பீதரில் 98 பேர், சாம்ராஜ்நகரில் 95 பேர், உத்தரகன்னடாவில் 77 பேர், ஹாவேரியில் 64 பேர், சிக்கமகளூருவில் 59 பேர், விஜயாப்புராவில் 58 பேர், சித்ரதுர்காவில் 58 பேர், குடகில் 51 பேர், ராமநகரில் 41 பேர், யாதகிரியில் 37 பேர், பெங்களூரு புறநகரில் 34 பேர் உள்ளனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 15 பேர், பல்லாரி, மைசூரு, ஹாசன், கோலாரில் தலா 4 பேர், சிவமொக்கா, பீதரில் தலா 3 பேர், பெலகாவி, பாகல்கோட்டை, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், உத்தரகன்னடா, ஹாவேரி, விஜயாப்புரா, யாதகிரியில் தலா ஒருவர், உடுப்பியில் 6 பேர், தார்வார், தாவணகெரேயில் தலா 8 பேர், துமகூரு, கலபுரகியில் தலா 5 பேர், ராய்ச்சூரில் 2 பேர், தட்சிண கன்னடாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாதிரிகள் பரிசோதனை
கர்நாடகத்தில் இதுவரை 80 ஆயிரத்து 281 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 5,602 பேர் அடங்குவர். 75 ஆயிரத்து 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 671 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 15 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதில் நேற்று மட்டும் 48 ஆயிரத்து 421 மாதிரிகள் அடங்கும்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story