விராலிப்பட்டியில் வெறிநாய்கள் கடித்து பெண்கள் உள்பட 14 பேர் காயம்: 13 கால்நடைகளும் பாதிப்பு
விராலிப்பட்டியில் வெறிநாய்கள் கடித்ததில் பெண்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். மேலும் 13 கால்நடைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
தரகம்பட்டி,
கரூர் மாவட்டம் மேலப்பகுதி ஊராட்சியை சேர்ந்த விராலிப்பட்டியில் நேற்று அதிகாலை சுமார் 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்தன. இந்நிலையில் திடீரென சில வெறிநாய்கள் வீடுகளுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மற்றும் வீட்டிற்கு அருகே கட்டப்பட்டிருந்த கால்நடைகளை கடித்து குதறின.
இதில் விராலிப்பட்டியை சேர்ந்த பழனியப்பன், மாணிக்கம், கன்னியம்மாள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். மேலும் 6 ஆடுகள், 4 பசுமாடுகள், 3 எருமைகள் உள்ளிட்ட 13 கால்நடைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் பிரேம்குமார் அங்கு வந்து காயமடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story