நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2020 6:59 AM IST (Updated: 7 Aug 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 3 ஆயிரத்து 452 பேர், பெண்கள் 2 ஆயிரத்து 345 பேர். இதில் தற்போது 2 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 2 ஆயிரத்து 82 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 679 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதவிர சித்தா கல்லூரியில் 141 பேரும், கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் 81 பேரும், ஸ்காட் மருத்துவமனையில் 98 பேரும், பத்தமடை சிவானந்தா மருத்துவமனையில் 93 பேரும், அரசு பொறியியல் கல்லூரியில் 124 பேரும், ஸ்காட் பொறியியல் கல்லூரியில் 32 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனியார் ஆஸ்பத்திரிகள்

மேலும் 5 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனவுக்கு சிகிச்சை அளிக்க 156 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 215 பேர் சேர்க்கப்பட்டு 131 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 84 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 841 கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 386 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, 212 பேர்களுக்கு நோய் இருப்பது கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story