களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு


களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2020 7:15 AM IST (Updated: 7 Aug 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு.

இட்டமொழி,

களக்காடு அருகே பத்மனேரி பஞ்சாயத்து வடமலைசமுத்திரத்தில் உள்ள ஓடைப்பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதையடுத்து அந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு புதிய பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். முன்னதாக ஏர்வாடி வணிகர் தெரு, வடக்கு மெயின் ரோடு பகுதியில் வடிகால் வசதியை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், திருவரங்கனேரியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஏர்வாடி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story