விருதுநகர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சருக்கு இன்று வரவேற்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் பங்கேற்பு


விருதுநகர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சருக்கு இன்று வரவேற்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 11:16 AM IST (Updated: 7 Aug 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக நெல்லை செல்லும் வழியில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன் ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர்.

விருதுநகர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கும் அர்ப்பணித்தார்.

முதல்-அமைச்சர் இன்று(வெள்ளிக்கிழமை) நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று நெல்லை செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

இதைதொடர்ந்து விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு முதல்-அமைச்சர் வருகிறார். அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகளிடம் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம், அதற்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிகிறார்.

Next Story