கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மண்டியா,
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை கடந்த 10 நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 51 ஆயிரத்து 785 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 114.80 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்ப இன்னும் 10 அடி மட்டுமே பாக்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து அதிகளவு தண்ணீரை திறக்க நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கே.ஆர்.எஸ். அணையின் செயற்பொறியாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு அதிகளவு நீர்வருவதால், எந்த சூழ்நிலையிலும் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்தால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, முன்எச்சரிக்கையாக காவிரி ஆற்றங்கரையைஒட்டிய மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், ஆற்றங்கரையோர வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 904 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 116 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, மைசூரு, நஞ்சன்கூடு, கொள்ளேகால், குண்டலுபேட்டை தாலுகாக்களில் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரத்தில் உள்ள சில கிராமங்களை சேர்ந்த மக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அதுபோல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் கடந்த 15 நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது, இதனால் கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முழு கொள்ளளவை எட்டியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கடல்மட்டத்தில் இருந்து 696.16 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 694.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து அந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
90 ஆயிரம் கனஅடி நீர்
இதனால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நஞ்சன்கூடு, மைசூரு, தலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கபிலா ஆற்றங்கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தால் ஆற்றங்கரையை ஒட்டிய விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
கபிலா ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீர் நஞ்சன்கூடு அருகே திருமக்கூடலுவில் காவிரி ஆற்றுடன் இணைந்து அகன்ற காவிரியாக கொள்ளேகால், குண்டலுபேட்டை வழியாக தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்கு சென்று வருகிறது. கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story