மாவட்ட செய்திகள்

2-வது நினைவு தினம்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை + "||" + 2nd Remembrance Day: DMK pays homage to Karunanidhi portrait

2-வது நினைவு தினம்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை

2-வது நினைவு தினம்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை
கருணாநிதியின் 2-வது நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது படத்துக்கு, தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது இதையொட்டி புதுவை பழைய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள அண்ணா சிலை அருகே கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


இதில், விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. மாநில பொறுப்பாளர் கபிரியேல், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதா குமார், பொருளாளர் சண்.குமரவேல், தலைமை தொழிற்சங்க செயலாளர் வேதா வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வெங்கடேசன் எம்.எல்.ஏ.

வடக்கு மாநில தி.மு.க. மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. சார்பில் பாக்குமுடையான்பேட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் சிவக்குமார், தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வில்லியனூர்

வில்லியனூர் அண்ணா சிலை அருகே தெற்கு மாநில தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் முன்னிலையில் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, 1,500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் ராமசாமி, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, மாநில பொருளாளர் சண்.குமாரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தியாகிகள் நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் அஞ்சலி
தியாகிகள் நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
2. வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது
வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது.
3. கார்கில் வெற்றி தினம்: போர் வீரர்கள் நினைவிடத்தில் கிரண்பெடி, நாராயணசாமி மரியாதை திடீரென நட்பு பாராட்டியதால் பரபரப்பு
கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுவையில் போர் வீரர்கள் நினைவிடத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அப்போது முதல்- அமைச்சருடன் திடீரென கவர்னர் நட்பு பாராட்டியது பர பரப்பை ஏற்படுத்தியது.
4. தொழிலாளர் தினம்: ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் துணை சபாநாயகர் வழங்கினார்
தொழிலாளர் தினத்தையொட்டி ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை