கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:56 PM GMT (Updated: 7 Aug 2020 10:56 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மீஞ்சூர்,

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தனது சொந்த செலவில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவுக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கினார். கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், ஏழை எளியோருக்கு தையல் எந்திரங்கள், சமையல் பாத்திரங்கள், 55 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 550 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1000-த்துடன் 5 கிலோ அரிசி, காய்கறி போன்றவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், ஒன்றிய குழுத்தலைவர் ரவி, ஒன்றிய அவைத்தலைவர் தன்சிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், பாளையம், ஒன்றிய துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், கஸ்தூரிதசரதன், சக்திவேல், ஒன்றிய பொருளாளர் ராஜா, வடசென்னை அனல்மின் நிலைய திட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஆவூர்அருள், சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன், கோபி, பாபு, மனோகரன், சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர்கள் வல்லூர்ரவி, பரிமளம்ஜெயா, சங்கீதாஅன்பழகன், சகாதேவன், நாகன், ராஜா, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் தமிழரசன், லோகநாதன், கலைவாணன், சரவணன், தமிழ்குடிமகன் மற்றும் பலர் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Next Story