மாவட்ட செய்திகள்

சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை + "||" + Public siege at Revenue Analyst's office demanding removal of fire land occupation

சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சென்னயனேரி கிராமத்தில் 3 ஏக்கர் சுடுகாட்டு நிலம் உள்ளது. இதனை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுடுகாட்டு நிலத்தை மீட்டு 3 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டி தரவும், ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கிராம மக்கள், வருவாய் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.


முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த சென்னயனேரி கிராம மக்கள், ஒரத்தியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் சஞ்சீவ குமாரி மற்றும் ஒரத்தி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
2. மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
3. அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
அம்பேத்கர் நகரில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தபால் நிலையம் முற்றுகை
வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சார்பில் நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...