திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம்: கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கான நகர் ஊரமைப்பு துறையின் மண்டல அலுவலகம், தஞ்சாவூரில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி வரை செயல்பட்டு வந்தது. நில உபயோக மாற்றம், வீட்டு மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான தொழில்நுட்ப அனுமதி, திட்ட அனுமதி பெற வேண்டுமாயின் 4 மாவட்ட மக்களும் தஞ்சாவூர் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.
தற்போது நகர் ஊரமைப்பு துறைக்கென திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு கடந்த 27-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தினர் நில உபயோக மாற்றம், வீட்டுமனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெறுவதற்கு இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story