மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு


மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 5:43 AM IST (Updated: 8 Aug 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக சென்றார். அப்போது, அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

வரவேற்பு

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

நிகழ்ச்சியில்் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கோவில்பட்டியில் வைத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Next Story