அரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம்: அரசு கொறடா திறந்து வைத்தார்


அரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம்: அரசு கொறடா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 8 Aug 2020 12:45 AM GMT (Updated: 8 Aug 2020 12:45 AM GMT)

அரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையத்தினை அரசு கொறடா திறந்து வைத்தார்.

அரியலூர், 

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்டம், குறுமஞ்சாவடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் புதிதாக கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து, மருந்துகளை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் ரத்னா உடனிருந்தார். பின்னர் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், இந்த சித்தா சிறப்பு மையத்தில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தலா ஒரு சித்த மருத்துவர், அலோபதி மருத்துவர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் என 10 பேர் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்து மூலம் சிகிச்சைகள் அளிக்கவுள்ளனர். மேலும் இந்த மையத்தில் கொரோனா அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கு ஆட்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவார்கள். சிகிச்சை பெறுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான உணவுகளும், நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்படவுள்ளது, என்றார்.

இதைத்தொடர்ந்து அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் ஊரடங்கு காலத்தில் தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார். இதில் கலெக்டர் ரத்னா, மாவட்ட மாற்றுத்திறாளி நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story