நாமக்கல் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர் உள்பட 34 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர் உள்பட 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதுவரை 566 பேர் குணமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வரும் 55 வயதுடைய ஆணுக்கும், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி செவிலியராக பணியாற்றி வரும் 35 வயதுடைய ஆண் உள்பட 3 பேருக்கும், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 90 வயது மூதாட்டி, 82 வயது முதியவர் உள்பட மொத்தம் 34 பேருக்கு நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 924 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story