தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் சாவு
தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் நேற்று உயிரிழந்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி நெடுமாறன் நகரை சேர்ந்த 74 வயது முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவரை தர்மபுரி அரசு மருத்துவனையில் கடந்த 27-ந்தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த முதியவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது முதியவர் ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கடந்த 30-ந்தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கனவே 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் நேற்று இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story