திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 31 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1089 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 31 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1089 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 Aug 2020 10:25 AM IST (Updated: 8 Aug 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1089 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. ஏற்கனவே 6-வது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், தற்போது வருகிற 31-ந் தேதி வரை 7-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பும் தினமும் 5 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், மாஸ்கோநகரை சேர்ந்த 23 வயது பெண், கொங்கு மெயின்ரோடு முதல் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், சூசையாபுரத்தை சேர்ந்த 53 வயது ஆண், குமாரானந்தாபுரத்தை சேர்ந்த 34 வயது ஆண், கரட்டாங்காடு 2-வது தெருவை சேர்ந்த 35 வயது ஆண், பாபுஜிநகரை சேர்ந்த 19 வயது ஆண், கணபதிபாளையத்தை சேர்ந்த 50 வயது பெண், பெரியார்காலனி சாமிநாதபுரத்தை சேர்ந்த 27 வயது ஆண், தேவராயம்பாளையத்தை சேர்ந்த 45 வயது பெண், வெள்ளகோவில் அண்ணாநகரை சேர்ந்த 5 வயது சிறுமி, அவினாசி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், அவினாசி நரியம்பாளையத்தை சேர்ந்த 70 வயது பெண், கருவலூர் பகுதியை சேர்ந்த 28 வயது ஆண்.

தேவராயம்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 36 வயது பெண், 45 வயது பெண், வடுகபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண், வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ஏ.ஆர்.டி. மைய டாக்டரான 52 வயது ஆண், குமாராபாளையம் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த 34 வயது பெண், இந்திராநகரை சேர்ந்த 68 வயது ஆண், வெள்ளியங்காடு 2-வது தெருவை சேர்ந்த 46 வயது ஆண், நேதாஜிநகரை சேர்ந்த 47 வயது பெண், உடுமலை ராமசாமிநகரை சேர்ந்த 65 வயது ஆண், ஊதியூரை சேர்ந்த 37 வயது ஆண், பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 21 வயது பெண், வாலிபாளையத்தை சேர்ந்த 64 வயது ஆண், திருப்பூர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்த 43 வயது ஆண், பல்லடம் சோமனூர் ரோடு பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், 63 வயது ஆண், மங்கலம் அக்ராஹாரபுதூரை சேர்ந்த 31 வயது ஆண் ஆகிய 31 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1089 ஆக உயர்ந்துள்ளது.

Next Story