முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றார்
நெல்லை செல்லும் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆவல்சூரன்பட்டி அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததுடன் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முடிவடைந்த திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நேற்று விருதுநகர் வழியாக நெல்லை சென்ற அவர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக காரில் நெல்லை சென்ற முதல்-அமைச்சருக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து கலெக்டர் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆரோக்கியராஜ், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதிராஜசேகர், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம், ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, சிவகாசி முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், அருப்புக்கோட்டை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சோலை சேதுபதி, எம்.ஜி.ஆர். இளைஞரணி அணி மாவட்ட தலைவர் ராமர், கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story