முதல்-அமைச்சர் நாளை வருகை கள்ளக்குறிச்சியில் முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. ஆய்வு
முதல்-அமைச்சர் நாளை வருகை கள்ளக்குறிச்சியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கிரண்குராலா மற்றும் பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, விவசாயிகள் குறைகேட்பு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை(திங்கட்கிழமை)நடைபெறுகிறது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story