காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு


காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Aug 2020 6:45 AM IST (Updated: 10 Aug 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் முசரவாக்கம் கிராமம் சடயவிநாயகபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் உமாபதி (52). கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் பாலுச்செட்டிசத்திரத்தில் இருந்து முசரவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். யுவராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.

பாலுச்செட்டிசத்திரம் பை-பாஸ் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது ஒரு மோட்டார்சைக் கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் உமாபதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யுவராஜ் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோதிய மோட்டார்சைக்கியில் வந்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வெங்கடாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), காட்பாடி தாலுகாவை சேர்ந்த குணசேகரன் (29) இருவரும் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story