நெல்லை அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது


நெல்லை அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 10 Aug 2020 6:51 AM IST (Updated: 10 Aug 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையை அடுத்த செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 67) விவசாயி. இவருடைய மகன் ராமமூர்த்தி (44). இவர் குடும்ப சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தந்தை கணபதியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி வீட்டில் இருந்து மூன்றடைப்பில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமமூர்த்தி, கணபதியை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணபதி மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அவரை விரட்டிச்சென்று ராமமூர்த்தி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

மகன் கைது

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி நேற்று கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story