தஞ்சை மாவட்டத்தில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு - இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தை போல இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது ஞாயிற்றுக்கிழமையாக நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. முழு ஊரடங்கால் பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினர். இதுவரை கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கை காட்டிலும் நேற்று இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவ்வாறு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தனர்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றவர்கள் சிலர், பெட்ரோல் காலியானதால் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story