மாவட்ட செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்புக்கு புதிய வலைதளம்-சிவகங்கை கலெக்டர் தகவல் + "||" + New Website for Private Sector Employment-Sivagangai Collector Information

தனியார் துறை வேலைவாய்ப்புக்கு புதிய வலைதளம்-சிவகங்கை கலெக்டர் தகவல்

தனியார் துறை வேலைவாய்ப்புக்கு புதிய வலைதளம்-சிவகங்கை கலெக்டர் தகவல்
தமிழக அரசின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளம் தொடங்கப்பட்டு உள்ளது என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் அலுவலக அளவில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவிலான பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகாம்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வேலைதேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் தற்போது இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தும் வகையில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கு பொருத்தமான வேலையை எளிதில் தேர்வு செய்யும் வகையில் https://www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளது.

இந்த வலைதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான பணி வாய்ப்பினை பெறலாம். இந்த வலைதளத்தில் மாவட்டம் வாரியாக, கல்வித்தகுதிமற்றும் சம்பளம் வாரியாக மற்றும் தொழில் வாரியாக பணிகளைதேர்வு செய்யும் வசதி உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

மேற்காணும் இணையதளத்தில் தமிழக அளவில் இதுவரை 747 வேலையளிப்பவர்களும், 31,283 வேலைநாடுனர்களும் பதிவுசெய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 12 வேலையளிப்பவர்களும் 493 வேலைநாடும் இளைஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருள் வாங்கமுடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் பெற சிறப்பு சலுகை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பயோமெட்ரிக் முறையில் நியாயவிலை கடைக்கு சென்று அத்தியாவசிய பொருள் பெற முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2. தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
3. பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
4. மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
5. துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.4½ கோடி ஒதுக்கீடு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
சிவகங்கை மாவட்டத்திற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.4 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-