தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை அரண்மனைவாசலில் தி.மு.க., கம்யூனிஸ்டு, விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை,
மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண்மை சேவை ஒப்பந்த சட்டம், வணிக ஊக்குவிப்பு ஆகிய அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரி சிவகங்கை அரண்மனைவாசலில் தி.மு.க., கம்யூனிஸ்டு, விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், நகர செயலாளர் துரைஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலர் எம்.எஸ்.கண்ணன், விவசாய சங்க மாவட்ட செயலர் முத்துராமலிங்கம், கோபால், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் சண்முகராஜன், நகர் தலைவர் பிரபாகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புலவர்.செவந்தியப்பன் மற்றும் கார்கண்ணன், சுந்தரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மணியம்மா, உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story