கந்திலி பகுதியில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கந்திலி பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட குழு சார்பில் கந்திலி புதுப்பேட்டை கேத்தாண்டப்பட்டி நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரா.முல்லை தலைமை தாங்கினார். விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மாதம் ரூ.7,500 மற்றும் 10 கிலோ அரிசி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக மாற்றி ரூ.600 கூலி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக் கூடாது, விவசாய விளைபொருட்களின் விலையை அதிகப்படுத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பலர் கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சிவன்அருளிடம் மனு அளித்தனர். அதில் “நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் உள்ள உழவர் சந்தைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் வழி இருப்பதால் உள்பக்கத்தில் சரியாக வியாபாரம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே தெற்குப் புறத்தில் வழி அமைக்க உத்தரவிட்ட பிறகும் இதுவரை வழி அமைக்கப்படவில்லை. மேலும் காய்கறி கடைகளை மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story