குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா


குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Aug 2020 11:04 PM IST (Updated: 11 Aug 2020 11:04 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குடியாத்தம், 

குடியாத்தம் நெல்லூர்பேட்டை, ராஜகணபதி நகர், பரசுராம்பட்டி, அக்ராவரம், எர்த்தாங்கல் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், கள்ளூரில் 3 பேர், புவனேஸ்வரிபேட்டை, பிச்சனூரில் தலா 4 பேர், வேப்பூர் காலனியில் 5 பேர் உள்பட மொத்தம் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஹயாத் நகர், கேத்தாண்டப்பட்டி சின்னூர், அண்ணான்டப்பட்டி, ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் மற்றும் பக்கிரிதக்கா வள்ளிநகர் பகுதியில் 2 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் பெருமாள் கோவில் தெரு, மாங்காணிப்பட்டு மேட்டு தெரு, வீரராகவபுரம் நெமிலி ரோடு, பாணாவரம் ரங்காபுரம், வீரராகவபுரம் பஜனை கோவில் தெரு ஆகிய இடங்களில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கலவை

கலவை, பிராமணர் தெருவில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

Next Story