கோழிக்கோட்டில் விமான விபத்தில் பலியான விமானி தீபக் சாத்தேயின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது


கோழிக்கோட்டில் விமான விபத்தில் பலியான விமானி தீபக் சாத்தேயின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது
x
தினத்தந்தி 12 Aug 2020 2:50 AM IST (Updated: 12 Aug 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

விமானி தீபக் சாத்தேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.

மும்பை,

கொரேனாாவால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விமானம் மூலம் அழைத்து வருகிறது. அவ்வாறு துபாயில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வந்த ஏர் இந்தியா விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் சறுக்கி சென்று 35 அடி பள்ளத்தில் பாய்ந்து 2 ஆக உடைந்தது. இந்த விபத்தில் மும்பையை சேர்ந்த விமானி கேப்டன் தீபக் சாத்தே உள்பட 19 பேர் பலியானார்.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானி தீபக் சாத்தேவின் உடல் விமானம் மூலம் கேரளாவில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டது.

அரசு மரியாதை

நேற்று அவரது உடலுக்கு இறுதி சடங்கு விக்ரோலி தாகூர் நகரில் நடந்தது. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது.

முன்னதாக விமானி தீபக் சாத்தேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து இருந்தார். அதில் அவர், விமானி தீபக் சாத்தேவின் வாழ்க்கை பல இளம் விமானிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Next Story