டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2020 12:06 AM GMT (Updated: 12 Aug 2020 12:06 AM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, 

பெருகிவரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், நோய் தடுப்பு பணியினை போர்க்கால் அடிப்படையில் செய்யவேண்டும், டாக்டர், நர்சு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நிரப்பவேண்டும், சுகாதார துப்புரவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம், தொகுதி செயலாளர்கள் சேகர், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தட்டாஞ்சாவடி

தட்டாஞ்சாவடி தொகுதியில் 5 மையங்களில் தொகுதி செயலாளர் முருகன் தலைமையிலும், காமராஜ் நகர் தொகுதியில் 2 மையங்களில் தொகுதி செயலாளர் துரை.செல்வம் தலைமையிலும், லாஸ்பேட்டையில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், முத்தியால்பேட்டையில் தொகுதி செயலாளர் ஜீவானந்தம் தலைமயிலும், நெல்லித்தோப்பு தொகுதியில் மோகன் தலைமையிலும், முதலியார்பேட்டையில் கே.ஜி.ஏகாம்பரம் தலைமையிலும் ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, தொகுதி செயலாளர் அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story