தென்காசியில் அனுமதிபெற்ற இடங்களில் மட்டுமே போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு


தென்காசியில் அனுமதிபெற்ற இடங்களில் மட்டுமே போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 12 Aug 2020 7:12 AM IST (Updated: 12 Aug 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அனுமதிபெற்ற இடங்களில் மட்டுமே போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தென்காசி, 

தென்காசி நகரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனை மாற்றி தென்காசி நகரத்தை அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தென்காசியில் உள்ள ஒரு மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தாசில்தார் சுப்பையன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஜெயராமன், வியாபாரிகள் நலச்சங்கசெயலாளர் மாரியப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை, தி.மு.க. நகர செயலாளர் சாதிர், காங்கிரஸ் நகர தலைவர் காஜா முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், த.மு.மு.க. மாவட்ட தலைவர் யாகூப் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனுமதிபெற்ற இடங்களில்...

கூட்டத்தில் தென்காசி பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கொடிமரம் ஆகிய பகுதிகளில் மட்டும் அனுமதி பெற்று போஸ்டர்கள் ஒட்ட வேண்டும். இவை தவிர மற்ற எந்த இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அவ்வாறு மீறினால் அந்த போஸ்டர்களை கிழித்து அவற்றில் பெயிண்ட் அடிக்க வேண்டும். இதற்கான செலவை போஸ்டர்கள் ஒட்டியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக் கும் பதாகைகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்படாவிட்டால் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த முடிவுகள் வருகிற 15-ந்தேதி (சனிக் கிழமை) முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Next Story