நாமக்கல் அருகே, 200 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையம் - கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்
நாமக்கல் அருகே 200 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையத்தை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தும் மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் 289 பேரும், வீடுகளில் 5,221 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story