கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு 3 பேர் பலி 15 டாக்டர்கள் உள்பட 281 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். 15 டாக்டர்கள் உள்பட 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 ஆயிரத்து 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அண்ணாகிராமத்தை சேர்ந்த டாக்டர், புவனகிரியை சேர்ந்த போலீஸ்காரர், மருத்துவ பணியாளர், சிதம்பரம் நகராட்சி பகுதியை சேர்ந்த மருத்துவ பணியாளர், 2 செவிலியர்கள், 2 மருந்தாளுனர்கள், கடலூர் ஒன்றியத்தை சேர்ந்த டாக்டர், 3 போலீசார், செவிலியர், அரசு ஊழியர், கடலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த 2 டாக்டர்கள், 3 போலீசார், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த செவிலியர், போலீஸ்காரர், குமராட்சியை சேர்ந்த டாக்டர், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள், 8 டாக்டர்கள், செவிலியர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த களப்பணியாளர், 2 போலீசார், ஒரு செவிலியர், பண்ருட்டியை சேர்ந்த 2 டாக்டர்கள், போலீஸ்காரர், விருத்தாசலத்தை சேர்ந்த செவிலியர் ஆகியோருக்கும் பாதிப்பு உறுதியானது.
இதுதவிர கடலூர் மத்திய சிறை, கடலூர் கிளை சிறை, மங்களூரை சேர்ந்த 15 கைதிகள், கடலூர், விருத்தாசலம், சிதம்பரத்தை சேர்ந்த 5 கர்ப்பிணிகள், கடலூர், அண்ணாகிராமத்தை சேர்ந்த பிரசவித்த 2 தாய்மார்கள், அறுவை சிகிச்சைக்காக இருந்த குமராட்சியை சேர்ந்த நோயாளி, நுரையீரல் தொற்று, கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 95 பேருக்கும் தொற்று உறுதியானது. சென்னையில் இருந்து மங்களூர், பண்ருட்டி, புவனகிரி வந்த 4 பேர், திருச்சி, ஈரோட்டில் இருந்து நெய்வேலி வந்த 3 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 113 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5347 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் வரை 65 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 3 பேர் பலியாகி உள்ளனர். அதாவது பண்ருட்டியை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் நோய் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் சிதம்பரத்தை சேர்ந்த 68 வயது முதியவர், 42 வயது பெண் ஆகியோரும் நோய் தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதில் 68 வயது முதியவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினமும், 42 வயது பெண் நேற்றும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் 2736 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 157 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இதன் மூலம் 2893 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட 2207 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 179 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 59 ஆயிரத்து 208 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,347 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2277 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Related Tags :
Next Story