பஸ் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி போராட்டம்


பஸ் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி போராட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2020 2:44 AM IST (Updated: 13 Aug 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசை வலியுறுத்தி வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

மும்பை, 

கொரோனா பரவல் காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இன்னும் பல இடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் பொதுமக்களின் வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்தார்.

போராட்டம்

இதையேற்று அந்த கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமித் பைகுல் கூறியதாவது:-

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மாநிலத்தில் 80 சதவீத மக்கள் வேலையின்மை மற்றும் பட்டினியினால் வாடி வருகின்றனர். பஸ் போக்குவரத்தை தொடங்கினால் தான் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக சென்று வர முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story