அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்கு தனி இடம்
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இங்கு நாள்தோறும் சோதனைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் புதிதாக பரிசோதனைக்கு வருபவர்களை தனியாக ஒரு இடத்தில் வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்க அறை
இதையொட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு இடங்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கலெக்டர் அருண் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அவர்களிடம், தற்போது மழைக்காலம் என்பதால் மருத்துவமனைக்கு வெளியே வைத்து சோதனை நடத்துவது சரியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் கருத்தரங்க அறையில் வைத்து புதிதாக வருபவர்களுக்கு சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 500 பேர் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story