திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் டாக்டர் உள்பட 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,315ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1315 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி திருப்பூர் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்த 22 வயது ஆண், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையை சேர்ந்த 27 வயது ஆண், தொட்டிபாளையத்தை சேர்ந்த 29 வயது பெண், பூலுவப்பட்டி விக்னேஷ்வராநகரை சேர்ந்த 56 வயது ஆண், பொங்குபாளையம் கே.ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 59 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 46 வயது ஆண், பெரிச்சிபாளையத்தை சேர்ந்த 36 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 45 வயது பெண், பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்த 39 வயது ஆண், பல்லடம் ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த 52 வயது பெண், பல்லடம் சாமிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 24 வயது பெண், குண்டடத்தை சேர்ந்த 33 வயது ஆண், பல்லடம் கரைப்புதூரை சேர்ந்த 26 வயது ஆண், முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்த 49 வயது ஆண்.
முதலிபாளையத்தை சேர்ந்த 45 வயது பெண், எம்.எஸ்.நகரை சேர்ந்த 43 வயது ஆண், அங்கேரிபாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், திருப்பூர்-காங்கேயம் ரோட்டை சேர்ந்த 39 வயது ஆண், வீரபாண்டியை சேர்ந்த 45 வயது ஆண், சுப்பிரமணியம்நகரை சேர்ந்த 25 வயது ஆண், ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்த 28 வயது ஆண், விஜயாபுரத்தை சேர்ந்த 63 வயது பெண், இடுவாயை சேர்ந்த 23 வயது பெண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 55 வயது ஆண், காந்திநகரை சேர்ந்த 20 வயது பெண், 24 வயது ஆண், ராக்கிபாளையத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், கரட்டாங்காட்டை சேர்ந்த 11 வயது சிறுமி.
காங்கேயத்தை சேர்ந்த 28 வயது ஆண், ராக்கிபாளையத்தை சேர்ந்த 34 வயது பெண், தாராபுரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, 29 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 67 வயது பெண், தாராபுரத்தை சேர்ந்த 35 வயது ஆண், 70 வயது ஆண், பெருந்தொழுவை சேர்ந்த 32 வயது ஆண், காங்கேயத்தை சேர்ந்த 60 வயது பெண், பொங்கலூரை சேர்ந்த 23 வயது ஆண், கணியாம்பூண்டியை சேர்ந்த 68 வயது ஆண், 64 வயது பெண்.
கணியாம்பூண்டியை சேர்ந்த 60 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 27 வயது பெண், தெக்கலூரை சேர்ந்த 45 வயது பெண், 25 வயது ஆண், 19 வயது பெண், 36 வயது பெண், 58 வயது பெண், சேயூரை சேர்ந்த 50 வயது ஆண், 16 வயது சிறுவன், அவினாசியை சேர்ந்த 25 வயது ஆண், 32 வயது பெண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 60 வயது ஆண், தெக்கலூரை சேர்ந்த 28 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 24 வயது பெண், 22 வயது ஆண், குமாரானந்தபுரத்தை சேர்ந்த 43 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 67 வயது ஆண், செம்பியநல்லூரை சேர்ந்த 32 வயது ஆண், வெள்ளகோவிலை சேர்ந்த 56 வயது ஆண், 42 வயது ஆண், சேனாதிபதிபாளையத்தை சேர்ந்த 53 வயது ஆண், தாராபுரத்தை சேர்ந்த 35 வயது பெண், திருப்பூர் துணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) அலுவலக டாக்டரான 50 வயது ஆண், டிரைவரான 24 வயது ஆண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 56 வயது ஆண்.
கல்லாம்பாளையத்தை சேர்ந்த 69 வயது ஆண், திருப்பூர் விநாயகர்கோவிலை சேர்ந்த 22 வயது ஆண், சபாபதிபுரத்தை சேர்ந்த 78 வயது ஆண், பி.என்.ரோட்டை சேர்ந்த 46 வயது ஆண், சொர்ணபுரி அவென்யூவை சேர்ந்த 63 வயது ஆண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 27 வயது பெண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 41 வயது ஆண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 26 வயது ஆண், திலகர்நகரை சேர்ந்த 54 வயது ஆண், கட்டபொம்மன்நகரை சேர்ந்த 56 வயது ஆண், நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், தாராபுரத்தை சேர்ந்த 71 வயது ஆண், பி.என்.ரோட்டை சேர்ந்த 75 வயது ஆண், இடுவம்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண் ஆகிய 80 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,315 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story