மாவட்ட செய்திகள்

பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா + "||" + Corona to famous Tamil film actress Nikki Kalrani

பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா
பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை, 

கொரோனா தொற்றில் பிரபல நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சென்னை எழும்பூரில் வசிக்கிறார். தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா,கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2, கீ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து டுவிட்டரில் நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது:-

மீண்டு வருகிறேன்

“எனக்கு கடந்த வாரம் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், சுவை இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக லேசான பாதிப்பே இருந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று இப்போது தேறி வருகிறேன். எனக்கு வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் இல்லை என்பதால் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன். இந்த காலகட்டம் அனைவரையும் பயமுறுத்தக்கூடியது.

எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதும், மற்றவர்கள் பாதுகாப்பை கவனிப்பதும் முக்கியம். எல்லோரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி
கடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை