நச்சலூரில் அனைத்து கடைகளும் திடீரென அடைப்பு - கொரோனா பீதியால் பொதுமக்கள் அச்சம்


நச்சலூரில் அனைத்து கடைகளும் திடீரென அடைப்பு - கொரோனா பீதியால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 14 Aug 2020 3:30 AM IST (Updated: 14 Aug 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூரில், அனைத்து கடைகளும் திடீரென நேற்று அடைக்கப்பட்டன. இதனால் கொரோனா பீதியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 92 வயது மூதாட்டி ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 72 வயதுடைய முதியவருக்கு காய்ச்சல் இருந்ததாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அடுத்தடுத்து மூதாட்டி, முதியவர் உள்பட 3 பேர் திடீரென இறந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நச்சலூர் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் (ஒயின்ஷாப் தவிர) நேற்று திடீரென அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு அப்பகுதி பொது மக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நச்சலூர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story