திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டுகிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டுகிறது
x
தினத்தந்தி 15 Aug 2020 5:53 AM IST (Updated: 15 Aug 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 495 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டுகிறது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று கொரோனா வைரசால் 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீஞ்சூர் அருகே உள்ள அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் என்பவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரசால் 18 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிள் 14 ஆயிரத்து 731 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மாவட்டம் முழுவதும் 9 பேர் இறந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 8 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் 26 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 15 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்தது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், 39 வயது பெண், ஒரத்தூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 51 வயது ஆண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண், சிறுமத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், ஒரகடம் பகுதியை சேர்ந்த 29, வயது ஆண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 34, 52, 34 வயதுடைய பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 409 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 544 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்தது.


Next Story