தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு வழங்கப்படும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். 6 மாத காலமாக பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படாததால், சாலைவரியை ரத்து செய்ய வேண்டும். கடன் மாத தவணை, காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கு ஒரு ஆண்டு நீட்டிப்பு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சங்கர், முத்துகுமார், ராம்குமார், குத்தாலிங்கம், மகாலிங்கம், முருகன், செல்வம், சுதாகர், தாணுமூர்த்தி, கிருஷ்ணன் மற்றும் வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலக பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டு சென்றனர்.
அம்பை
இதேபோன்று அம்பை தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகதீசன், சங்க நிர்வாகிகள் சுரேஷ்பாபு, செல்வகுமார், மாரியப்பன், ஜமால், மாரியப்பன், முருகன், கொம்பையா, இசக்கி மற்றும் வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கள், தாசில்தாரிடம் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.
Related Tags :
Next Story