நாட்டின் கொரோனா தலைநகர், மராட்டியம் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
நாட்டின் கொரோனா தலைநகராக மராட்டியம் மாறி உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்தார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தநிலையில் மராட்டியம் கொரோனாவின் தலைநகரமாக மாறி உள்ளதாக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அரசியல் செய்வதை விட கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன்.
கொரோனா தலைநகர்
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 24 சதவீதம் மராட்டியத்தில் உள்ளது. இதேபோல நாட்டின் மொத்த பலி எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா தலைநகராக மராட்டியம் மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story