வானூர், மரக்காணம் பகுதியில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
வானூர், மரக்காணம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
வானூர்,
வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராமதாஸ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மோகனா, முன்னாள் கவுன்சிலர் செல்லப்பெருமாள், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சுமன், அம்பேத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார். வானூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சங்கரலிங்கம் தேசியக்கொடி ஏற்றினார்.
கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதில் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மரக்காணம்
மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஞானம் தேசியக்கொடி ஏற்றினார். மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மயில்வாகனம் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மரக்காணம் வேளாண் கூட்டுறவு வங்கியில் அதன் தலைவர் கனகராஜ் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story