இன்று முழு ஊரடங்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு இந்த மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் நேற்று காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லை டவுனில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள், பாளையங்கோட்டையில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள், தற்காலிக உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க பொது மக்கள் அலைமோதினர்.
விற்பனை மும்முரம்
இதை போல் டவுன் மேலமாடவீதி, ரத வீதிகள், பாளையங்கோட்டை கடை வீதிகளில் பொது மக்கள் மளிகை உள்ளிட்ட பொருட்களை இன்றைய தேவைக்கும் சேர்த்து கூடுதலாக வாங்கி சென்றனர். இதனால் அனைத்து பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் கூடுதலாக ஆடு, கோழி இறைச்சிகளையும், மீன்களையும் பொதுமக்கள் வாங்கினார்கள்.
இதனால் மார்க்கெட் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story