சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 470 பேருக்கு நற்சான்றிதழ் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்


சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 470 பேருக்கு நற்சான்றிதழ் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Aug 2020 3:45 AM IST (Updated: 16 Aug 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 470 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தேசிய கொடியை ஏற்றினார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் வரவேற்றார். இதையடுத்து கலெக்டர் ஜெயகாந்தன், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

கொரோனா தடுப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல் உள்பட 92 மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கும், சுகாதார துறை துணை இயக்குனர் யசோதாமணி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் 10 பேர் மற்றும் சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், ஆய்வக உதவியாளர், கிராம சுகாதார செவிலியர், தூய்மை பணியாளர் உள்பட 50 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மோகன், சீராளன், சுந்தரமகாலிங்கம், ஜெயமணி, ஸ்ரீதர், ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சி சுந்தரம், ரஞ்சித், பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட 16 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

பின்னர் வருவாய்த்துறையில் தாசில்தார்கள் மற்றும் கிராம தலையாரிகளுக்கும், பேரூராட்சி துறையில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன் (திருப்பத்தூர்), சந்திரகலா (திருப்புவனம்), குமரேசன் (மானாமதுரை), ஜெயராஜ் (இளையான்குடி)ஆகியோர்களுக்கும், மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் 11 தூய்மை பணியாளர்களுக்கும் கலெக்டர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய சமூக ஆர்வலர் அயோத்தி, சிவகங்கை சாம்பவிகா பள்ளி செயலர் சேகர், தொழிலதிபர் ஏ.கே.ஆர். கருப்பையா, ரமண விகாஷ் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கண்ணன், வர்ம டாக்டர்கள் சரவணன், ராஜரீகா மற்றும் சொக்கலிங்கம் உள்பட 470 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரெத்தினவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் முரளிதரன், ராஜேந்திரன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், இணை இயக்குனர்(மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குனர் யோகவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பில்லூர் ராமசாமி, சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளாபாலசந்தர், துணைத்தலைவர் கேசவன், சிவகங்கை தாசில்தார் மைலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் விழாவிற்கு வராத சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு கலெக்டர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து அவர்களை கவுரவித்தார். இதேபோல் சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் பள்ளி செயலர் சேகர், தேசியக்கொடியை ஏற்றினார். சோழபுரம் ஸ்ரீரமண விகாஷ் மேல்நிலை பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சேவியர், கொடியேற்றினார். விழாவில் வக்கீல் ராம்பிரபாகர், முத்துராஜா, ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாளர் சுப்பையா கொடியேற்றினார். விழாவில் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தலைமையாசிரியை மகாலெட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கையை அடுத்த இடையமேலூர் விக்னேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பள்ளி தாளாளர் ஜெயதாஷ் தலைமையில் முதல்வர் ஜான்சி கொடியேற்றினார். விழாவில் செயலாளர் ஜானகி மற்றும் ஆசிரியைகள் கீதா, ரஞ்சிதா, ஜெய்ஸ்ரீ, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கையை அடுத்த திருமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தேசிய கொடியேற்றினார். விழாவில் ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், சீனிவாசன், சாந்தி, மங்கையர்க்கரசி, முத்துலெட்சுமி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் அய்யனார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட இணைந்த கைகள் மாற்று திறனாளிகள் சேவை மையம் சார்பில் மாநில தலைவர் நாகூர்மீரா தலைமையில் முத்தனேந்தல் கிராம சட்ட ஆலோசகர் துரைராஜ் தேசிய கொடியேற்றினார். விழாவில் நிறுவனர் ராதிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story