வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி


வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2020 3:43 AM IST (Updated: 17 Aug 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ள நிலையில் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தினசரி எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளது. நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 1,012 பேருக்கு தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் 384 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுவை ராகவேந்திராநகர் அய்யனார் கோவிலை சேர்ந்த 43 வயது ஆண் ஜிப்மரிலும் தேங்காய்த்திட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஜிப்மரிலும் உயிரிழந்தனர். ஏனாமில் 58 மற்றும் 67 வயது ஆண்நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

வீடுகளில் சிகிச்சை

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 54 ஆயிரத்து 852 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 45 ஆயிரத்து 803 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. 695 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது.

இதுவரை 7 ஆயிரத்து 732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நிகராக 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் இறந்துள்ளனர்.

ஏனாம்

புதுச்சேரி பிராந்தியத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 6 பேரும், சிறிய பிராந்தியமான ஏனாமில் மட்டும் 12 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story