தனியார் மருத்துவ கல்லூரிகள் தானாக முன்வந்து சேவை செய்ய வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


தனியார் மருத்துவ கல்லூரிகள் தானாக முன்வந்து சேவை செய்ய வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Aug 2020 10:21 PM GMT (Updated: 16 Aug 2020 10:21 PM GMT)

தனியார் மருத்துவ கல்லூரிகள் தானாக முன்வந்து சேவை செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

எனது வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, சில ஊடகங்களில் மருத்துவ சகோதரத்துவத்துக்கு தங்கள் குறைகளை சுதந்திரமாக பகிர்ந்துகொள்ள செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த பதில்கள் மிகவும் மதிப்புமிக்கதாக உள்ளது. உறுதியான ரகசியத்தன்மையுடன் அனைத்து பரிந்துரைகளும், குறைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும் கோவிட் வார் ரூமுக்கும் அனுப்பட்டு சிக்கல்களை தீர்க்க பின்தொடர்வதால் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது இடைநிலை சிக்கல் களை தீர்க்கும். நம்பிக்கையுடன் தகவல்களை பகிர்வதால் புதுச்சேரியும், அதன் மக்களும் பல துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். தங்கள் கருத்துகளை அல்லது பிரச்சினைகளை பகிர்ந்துகொண்ட அனைவரும் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் களின் அடையாளம் வெளியிடப்படாது.

தானாக முன்வந்து...

கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தை எதிர்த்து போராட இந்த நம்பிக்கையான செயல்பாடுகள் நமக்கு தேவை. எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்தவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் இந்த பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்ப்பவர்களாகவும், ஒத்துழைப்புடனும், ஒற்றுமையாகவும் செயல்படுவதன் மூலம் மேலும் சேவை செய்ய முன்வருவதின் மூலமும் ஒன்றுபட வேண்டும்.

அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றின் வளங்களை கொண்ட நர்சிங் மற்றும் துணை மருத்துவ நிறுவனங்களும் ஒன்றிணைந்து தங்கள் சேவைகளை தானாகவே முன்வந்து வழங்கவேண்டும். தாமதமின்றி அனைவரையும் அரசு ஆதரிக்கவேண்டும். இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் ஒரு சிறிய இடத்தில் இவ்வளவு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் வசதிகள் இல்லை. அரசு மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்படும் அனைவருக்கும் சிகிச்சைக்கு பணம் செலுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story